வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். அங்குள்ள சி.டி.ஸ்கேன் எந்திரம் பழுதடைந்துள்ளது. அந்தப் பழுதை சரி செய்யாமல் உள்ளனர். இதனால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சி.டி.ஸ்கேன் பழுதை நீக்கி நோயாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ம.வெ.சுதாகர், கூத்தம்பாக்கம்.