உடைந்து விழும் கான்கிரீட் பூச்சுகள்

Update: 2022-08-25 09:52 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆங்காங்கே உள்ள கான்கிரீட் பூச்சுகள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது. சமீபத்தில் அங்குள்ள தபால் அலுவலக மேற்பகுதியில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து திடீரென உடைந்து விழுந்தது. பொதுமக்கள் ஒரு சிலர் அப்பகுதியில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். உடைந்து வரும் கான்கிரீட் பூச்சுகளால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த நிலையில் உள்ள கான்கிரீட் பூச்சுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாயவன், வேலூர்

மேலும் செய்திகள்