வேலூர் நகரில் பல்வேறு இடங்களில் மாடுகள் இடையூறாக திரிந்து வருகின்றன. சத்துவாச்சாரி பைபாஸ் சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு வழிவிடாமல் நடுரோட்டிலேயே மாடுகள் நிற்கின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நடுரோட்டில் மாடுகள் நிற்பதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து நடந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாடுகளை பிடிக்க வேண்டும்.
-அருள், வேலூர்.