வேலூர் அண்ணா சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த சாலையில் சாரதி மாளிகை முன்பு உள்ள சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹரிகரன், வேலூர்.