வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலைத்துக்குள் சுற்றித்திரியும் மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வது மட்டுமல்லாமல் பயணிகளுக்கும் தொல்லை கொடுக்கிறது. இதனால் பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆகாஸ், வேலூர்.