மாடுகள் தொல்லை

Update: 2023-12-31 17:49 GMT

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்தச் சாலையில் மாடுகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துகள் நடக்கவும் காரணமாக உள்ளன. மாடுகள் தொல்லையால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்