சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. அந்த அலுவலகத்துக்கு 40 ஊராட்சிகளில் இருந்து தினமும் தலைவர், ஊராட்சி செயலாளர், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் பலர் வருகின்றனர். அவர்களுக்கு கால்நடைகள் இடையூறாக உள்ளன. கால்நடை உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.