திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. ஒருசில மாடுகள் சாலையோரம் படுத்துக் கொள்கின்றன. அந்த வழியாக இரவில் வாகனங்களில் வேகமாக வருவோர் மாடுகள் மீது மோதி கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். மாடுகளை சாலையில் விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
-சுப்பிரமணி, திருப்பத்தூர்.