மாடுகள் தொல்லை

Update: 2022-11-16 12:22 GMT

வாலாஜாபேட்டையில் பிரதான சாலைகளான டிரங்க்ரோடு, புஜன்னர்தெரு, திருமலை தெரு, அம்மூர் ரோடு, அணைக்கட்டு ரோடு உள்பட நகரில் உள்ள 24 வார்டுகளிலும் பஸ் நிலைய வளாகத்திலும் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மாடுகள் இரவு, பகல் நேரங்களில் சாலைகளிலேயே படுத்துத் தூங்குகின்றன. அந்த வழியாக வாகனங்கள் செல்ல வழி இல்லாத நிலை ஏற்படுகிறது. மாடுகளை பிடித்த அதன் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.

-அழகர், வாலாஜா. 

மேலும் செய்திகள்