ஆற்காட்டில் உள்ள புதிய வேலூர் மெயின் ரோடு, அண்ணா சாலை, பஜார் சாலை, தொல்காப்பியர் தெரு, ஜீவானந்தம் சாலை உள்ளிட்ட பல தெருக்களில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது மட்டுமல்லாமல் காலை மற்றும் மாலை வேலைகளில் ஆற்காடு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அதிகமான மாடுகள் சுற்றித் திரிவதால் பள்ளி மாணவிகள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-காதர்பாஷா. ஆற்காடு.