கிடப்பில் போடப்பட்ட ரேஷன்கடை கட்டும் பணி

Update: 2023-01-25 11:15 GMT

கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடை, சித்திரசாவடி கேட் பகுதியில் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. மழை பெய்தால் ரேஷன் பொருட்கள் நனைந்து போகும் அவலம் ஏற்படும். எனவே புதிய ரேஷன் கடை கட்ட, பழைய ஊராட்சி அலுவலகம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் கட்டிட பணிகள் இன்னும் தொடங்கவில்லை. புதிய ரேஷன் கடை கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும்.

-அய்யப்பன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்