குழப்பத்தை ஏற்படுத்தும் தகவல் பலகை

Update: 2023-05-21 13:11 GMT

காட்பாடியை அருகே கரசமங்கலம் கூட்ரோடு பகுதியில் சேனூர் செல்லும் சாலையில் இருந்து காட்பாடி 5 கி.மீ. எனப் பழைய அளவு மைல்கல் உள்ளது. இதன் அருகே சமீபத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் 10 கி.மீ. எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. குழப்பத்தை ஏற்படுத்தும் இந்தத் தகவல் பலகையை சரியாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கோதண்டராமன், கரசமங்கலம்.

மேலும் செய்திகள்