ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் நிற்பதற்குக்கூட இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழைக்காலம் என்பதால் நிற்க இடம் இன்றி அருகில் உள்ள கடைகளில் சென்று நிற்கின்றனர். இதனால் கடைக்காரர்கள் இங்கு நிற்க வேண்டாம் எனக் கூறுவதால் வீண் விவாதம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கடைகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
-சந்திரன், சமூக ஆர்வலர், ஆற்காடு.