திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஏழு மாடிகளை கொண்ட கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை கேண்டீன் வசதி எதுவுமே கிடையாது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் டீ குடிக்க பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்குதான் செல்ல வேண்டும். இதனால் பொதுமக்களும் அலுவலக ஊழியர்களும் அவதிப்படுகின்றனர். எனவே கலெக்டர் அலுவலகத்தில் உடனடியாக கேண்டீன் வசதி ஏற்படுத்த வேண்டும்.
-பாரதி, திருப்பத்தூர்.