ஆற்காடு நகரில் பெரும்பாலான கழிவுநீர் கால்வாய் மண் தேங்கி தூர்ந்துேபாய் கால்வாயில் ஆழம் குறைந்து மழைக்காலங்களில் கழிவு நீர் மழை நீருடன் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையில் நடந்து செல்வதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. மழைநீர், கழிவுநீர் வடிந்ததும் சாலையில் ஆங்காங்கே சேறும் சகதியுமாக தேங்கி கிடக்கிறது. இனி வரும் காலம் மழைக் காலம் என்பதால் கால்வாய்களை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேந்திரன், ஆற்காடு.