திருவண்ணாமலை நகராட்சி புதுவாணியகுல தெருவில் சிறு மின்விசை தொட்டி உள்ளது. அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல போதிய கால்வாய் வசதி இல்லை. சாலையிலேயே கழிவுநீர் வழிந்தோடுகிறது. குடிநீர் தொட்டிக்கு அருகிலேயே கால்வாய் வசதி ஏற்படுத்தித்தர சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.தண்டபாணி, திருவண்ணாமலை.