கால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2022-08-15 12:41 GMT

ஆரணி-சேவூர் பைபாஸ் சாலை அருகே கமண்டல நாகநதி தடுப்பணையில் இருந்து பையூர் ஏரிக்கு செல்லக்கூடிய குதிரை கால்வாய் என்ற நீர்ப்பாசனக் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயை பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர். அந்தக் கால்வாயை பலர் ஆக்கிரமித்துள்ளனர். பொதுப்பணித்துறையினர் கால்வாயை தூர்வாரி சீரமைத்து பையூர் ஏரிக்கு ஆற்றுப் பாசன நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

சீனிவாசன், ஆரணி

மேலும் செய்திகள்