காட்பாடி விளையாட்டு மைதானம் புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு பராமரிப்பு பணிகள் நடக்காததால் விளையாட்டு மைதானத்தில் அங்காங்கே புற்களும் கட்டிடத்தில் உள்ள ஒரு சில கதவுகள் சேதம் அடைந்தும் காணப்படுகிறது. பராமரிப்புப் பணிக்கு ஆட்கள் இல்லாததால் விளையாட்டு மைதானம் பாழடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளையாட்டு மைதானத்தைப் பராமரிக்கவும் சேதமடைந்து வரும் கதவுகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருமலைராஜன், திருநகர், காட்பாடி.