வேலூர்-காட்பாடி சாலையில் கழிஞ்சூர் திருநகர் பஸ் நிறுத்தம் அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு இடத்தில் சிமெண்டு சிலாப் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி விட்டது. அந்தப் பள்ளத்தில் இரும்புக்கம்பிகள் வெளியே தெரிந்தவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் பள்ளத்தில் விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த சிமெண்டு சிலாப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலன், வேலூா்.