சிமெண்டு சிலாப் சரி செய்யப்படுமா?

Update: 2024-05-12 18:02 GMT

வேலூர் சங்கரன்பாளையம் காமராஜர் தெருவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேல் பகுதியில் சிமெண்டு சிலாப் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இரவில் நடந்து செல்லும் பொதுமக்கள் திடீரெனப் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை உருவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் சிமெண்டு சிலாப் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரிமுத்து, வேலூர்.

மேலும் செய்திகள்