வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள தனியார் பஸ்கள் தகவல் நிலைய அலுவலகம் அருகே பயணிகள் காத்திருப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகில் உள்ள தளத்தின் கற்கள் உடைந்துள்ளன. இதனால் பஸ் ஏற செல்லும் பயணிகள் அவசரத்தில் கால் இடறி கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே உடைந்து கிடக்கும் தரைத்தளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளையராஜா, வேலூர்.