வாலாஜா நகரில் பஸ் நிலையம் எதிரே போலீஸ் நிலையத் தெரு, கச்சேரி தெரு, நவாப் தேவதை தெரு ஆகிய பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் மிகக் குறுகிய சாலையாக மாறிவிட்டது. இந்தத் தெருவில் அதிக அளவில் துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளன. பொதுமக்களும் அதிகளவில் நடமாடும் பகுதியாக உள்ளது. இந்தச் சாலையில் சவ ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிப்பதால் துணிக்கடைகளில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போலீஸ் நிலைய தெருவில் சவ ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிப்பதை போலீசார் தடை செய்ய வேண்டும்.
-ஜாகீர், வாலாஜா.