வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் ஒரு சிலர் அவ்வப்போது தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவற்றைத் தடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே தீத்தடுப்பு கருவிகள் மற்றும் தீயணைப்பு வாளிகள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் குறை தீர்வு கூட்டம் நடக்கும் இடத்தின் அருகே உள்ள தீ தடுப்பு வாளிகள் உடைந்து பயன்பாடற்ற நிலையில் கிடைக்கின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய தீத்தடுப்பு வாளிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலன், வேலூர்.