வேலூர் தாலுகா அலுவலகத்துக்குள் நுழையும் வாசலின் மேற்பகுதியில் 2 கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளன. அவற்றில் ஒரு கேமரா உடைந்து கீழே தொங்கியவாறு உள்ளது. இதை, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டனர். தாலுகா அலுவலகத்துக்குள் வருபவர்களை கண்காணிப்பதற்கு கேமராக்கள் பயன்படுவதால், இதைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.