ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் அசோக் நகர் உள்ளது. இங்கு சரிவர குப்பைகளை ஊராட்சி துய்மைப் பணியாளர்கள் சேகரிப்பது கிடையாது. மேலும் சேரும் குப்பைகளை அங்கேயே தீ வைத்து எரித்து விடுகின்றனர். அதன் அருகிலேயே பள்ளிக்கூடம், நூலகம் போன்றவை உள்ளது. குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகையால் பள்ளி மாணவர்களும், நூலகத்துக்கு வரும் வாசகர்களுக்கும் சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே அசோக் நகர் பகுதியில் தினமும் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.