தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். வடக்கு தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாருவது இல்லை. பள்ளிக்கூடம் எதிரே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதம் அடைந்து, தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. இதுதவிர கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிக்குமார், அகரம்பள்ளிப்பட்டு