மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சியில் மசூதி பின்பக்கம் 3, 4-வது தெருவில் சாலை வசதி மற்றும் குடிநீர், கழிவுநீர் காவாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ளதால் பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரிவதில்லை. எனவே இப்பகுதியில் அதிகாாிகள் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
-சையத் ஷாகீர், சமூக ஆர்வலர், கைலாசகிரி.