குடியாத்தத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், மேல்பட்டி சாலை செருவங்கியில் இயங்கி வருகிறது. சுற்று வட்டாரப் பொதுமக்கள், சின்னவரிகம், பேரணாம்பட்டு, மாதனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து செல்ல வசதியாக உள்ளது. இதை, 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாக்கத்துக்கு இடமாற்றம் செய்ய உள்ளனர். பலருக்கும் சிரமத்தைத் தரும் இந்த இடமாற்றத்தைத் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
-ராமானுஜன், குடியாத்தம்.