ஆரணி தாலுகா மொழுகம்பூண்டி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்கள் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வேண்டும் என்றால் 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே மொழுகம்பூண்டி கிராமத்தில் ஏதேனும் ஒரு வங்கி சார்பில் ஏ.டி.எம். மையம் அமைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் முன்வருவார்களா?
-பெ.முனியாண்டி, மொழுகம்பூண்டி.