கே.வி.குப்பம் தாலுகா குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் தேவரிஷிகுப்பம் செல்லும் பயணிகள் நிழற்குடை பகுதியில் செடி,கொடிகள் வளர்ந்திருந்தது. இதனால், அந்தப் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாதபடி இருந்தது. இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. அந்தச் செய்தி எதிரொலியால் செடி, கொடிகள் அகற்றி பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள், பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
-மணிவண்ணன்,தேவரிஷிகுப்பம்.