கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தநிலையில் பாதுகாப்பு இல்லாமல் சமூக விரோத செயல்களுக்குக் காரணமாக இருந்து வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி ெவளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-கிருஷ்ணன், கே.வி.குப்பம்.