ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா அப்பாதுரைப்பேட்டையில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. அந்த வளாகத்தில் தினமும் மதுபானப் பிரியர்கள் மதுவை வாங்கி வந்து குடிக்கின்றனர். காலி பாட்டில், டம்ளர்களை அங்கே போட்டு விட்டு செல்கிறார்கள். மதுபானப்பிரியர்களின் அட்டகாசத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
-ஆர்.சுபாஷ், கலவை.