கூடுதல் நர்சுகளை நியமிக்க வேண்டும்

Update: 2023-08-06 13:10 GMT

ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமானோர் சிகிச்சை பெறுகிறார்கள். இரவில் ஒரு நர்சு மட்டுமே பணியில் உள்ளார். அவர், பிரசவம் பார்க்க சென்று விடும்போது, அவசர சிகிச்சைக்காக வரும் புறநோயாளிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே இரவில் கூடுதலாக நர்சுகளை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம். 

மேலும் செய்திகள்