கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்

Update: 2023-08-27 16:30 GMT

செங்கம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கிராம மக்கள் பலர் சிகிச்சைக்காக செங்கம் தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர். அவ்வாறு காலையிலேயே வருபவர்கள் டாக்டர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட தலைமை மருத்துவர் நடவடிக்கை எடுத்து கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

-இளங்கோ, செங்கம்.

மேலும் செய்திகள்