மாடுகளால் விபத்து

Update: 2023-06-18 14:24 GMT

ஆற்காட்டில் பிரதான சாலைகளான மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் சாலைகளான வேலூர் மெயின் ரோடு, ஜீவானந்தம் சாலை, தொல்காப்பியர் சாலை, அண்ணா சாலை, 70 அடி சாலை ஆகிய சாலைகள் உள்ளன. இந்தச் சாலைகளில் பெரும்பாலான நேரங்களில் சாலையின் குறுக்கே மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு கை, கால் முறிவு சம்பவங்களும் நடந்துள்ளன. விபத்து, போக்குவரத்து நெரிசல் சம்பவங்கள் தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பன்னீர்செல்வம், ஆற்காடு.

மேலும் செய்திகள்