திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பாவுப்பட்டு கிராமம். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரு வளைவு பகுதியில் பஸ் பயணிகள் நிழற்குடை உள்ளது. அதில் செடி, கொடிகள், முட்புதர் வளர்ந்துள்ளது. முன் பகுதியில் சுவர் கட்டப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. அந்தப் பயணிகள் நிழற்குடையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டு கொண்டு வருவது மட்டுமின்றி, நிழற்குடையின் முன்னால் உள்ள சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருமூர்த்தி, பாவுப்பட்டு