திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெருஞ்சலகுடியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் வகையில், ரேஷன் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரேஷன் கடை கட்டிடம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது ஆங்காங்கே சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் இந்த கடைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். மேலும் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.