சோளிங்கர் ரெயில் நிலையம் வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் சென்று வருகின்றன. மழை, வெயில் காலத்தில் ரெயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகள், அரசு மேல்நிலை, தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், கர்ப்பிணிகள், முதியோர் ரெயில் நிலையம் அருகில் பாணாவரம் பகுதியில் இருந்து நெமிலி செல்லும் சாலையில் பஸ் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ அல்லது தொகுதி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சோளிங்கர் ரெயில் நிலையம் அருகில் பஸ் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர வேண்டும்.
-ராஜா, சோளிங்கர்.