கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு துறை உள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிழக்கு வாசல் திறக்கப்பட்டு கடலில் இறங்கி பகவதி அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும். இதற்கான கடற்கரையில் பெரிய கற்களால் சுவர்போல் இருபக்கமும் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக கடலில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெற வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. சுனாமியின்போது ஆராட்டு மண்டபம் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கற்சுவரும் சேதமடைந்தது. தற்போது ஆராட்டு துறையில் கற்கல் அதிகமாக காணப்படுவதால் அம்மன் சிலையை பாதுகாப்பாக கடலுக்குள் கொண்டு செல்ல பூசாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே, கடற்பகுதியில் காணப்படும் கற்களை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனந்தநாராயணன், கன்னியாகுமரி.