விபத்து அபாயம்

Update: 2026-01-25 07:38 GMT

நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலையின் திருப்பத்தில் கழிவுநீர் ஓடையின் மீது சிலாப்புகள் அமைத்து நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சிமெண்டு சிலாப்பு உடைத்தும், அதன் மீது காவல்துறையின் பேரிகார்டை வைத்து மறைத்துள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகளும், பஸ்சில் பயணம் செய்பவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்து காணப்படும் ஓடையின் மீது புதிய சிமெண்டு சிலாப்புகள் அமைத்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வகுமார், தென்தாமரைகுளம்.


மேலும் செய்திகள்