அரியலூர் நகர பஸ் நிலையம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சமூக விரோதிகள் சிலர் பஸ் நிலைய கட்டிடங்களின் உள்ளே இரவு நேரங்களில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். மேலும் காலி பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டும் செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையத்தின் அருகே நிற்பதற்கே பெண்களும், குழந்தைகளும் அச்சப்படும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலைய வளாகத்தினுள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.