பயணிகள் அவதி

Update: 2026-01-25 10:13 GMT

பெரம்பலூர் நகரம் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக உள்ளது. தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் பெரம்பலூர் வழியாக சென்னைக்கு போக்குவரத்து நடைப்பெற்று வருகிறது. பெரம்பலூர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தொழில் நகரம் திருப்பூர் பகுதியில் பொதுமக்கள் வேலை செய்து வருகின்றனர். பெரம்பலூரில் இருந்து துறையூர் முசிறி, குளித்தலை, கரூர், காங்கேயம் வழியாக திருப்பூர் செல்ல இன்று வரை அரசு பஸ் வசதிகள் இல்லை. இதனால் பண்டிகை காலங்கள் மற்றும் அன்றாட நாட்களில் பெரம்பலூர் பகுதியில் இருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயண நேரம் அதிமாவதுடன் கூடுதல் கட்டணம் பயணிகள் செலுத்த வேண்டியுள்ளது. பெரம்பலூர் நகரில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய 2 இடங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த பணிமனைகளில் இருந்து காலை மற்றும் இரவு ஆகிய 2 நேரங்களில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து துறையூர், முசிறி, குளித்தலை, கரூர், காங்கேயம் வழியாக திருப்பூர் செல்ல புதிய பஸ் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்