புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திருவோணம் சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான குட்டை குளம் உள்ளது. இந்த குளத்தில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீரை திறந்து விடுகின்றனர். இதனால் தண்ணீர் அசுத்தமாகி துர்நாற்றம் வீசுகிறது. இந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கறம்பக்குடி குட்டை குளத்தை தூய்மையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.