ஓலை கீற்றால் வேய்ந்த பயணிகள் நிழற்குடை

Update: 2024-11-17 19:07 GMT

காட்பாடி கார்ணாம்பட்டு ரெயில்வே மேம்பாலம் பஸ் நிறுத்தத்தில் தற்காலிக பயணிகள் நிழற்குடை உள்ளது. அந்த நிழற்குடை ஓலையால் பந்தல் போன்று அமைக்கப்பட்டுள்ளதால் மழை காலங்களில் ஒழுகுகிறது. சாரல் அடிக்கும்போது பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிமெண்டு சீட் மூலம் தற்காலிக நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சித்தார்த்தன், கார்ணாம்பட்டு. 

மேலும் செய்திகள்