கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஊராட்சியில் வீரகோவில் வழியாக படவேடு கிராமப்புற சாலை செல்கிறது. இந்தச் சாலையில் மேற்கே கோட்டைமலை செல்லும் சாலை பிரிகிறது. இச்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் கோட்டைமலை அடிவாரம் சென்று, அங்கிருந்து 7 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழியே நடந்து சென்றால் வேணுகோபாலசாமி கோவிலை அடையலாம். படவேடு வீரகோவில் பகுதியில் இச்சாலை, படவேடு சாலை இணையும் இடத்தில் மோட்டார் சைக்கிள் உள்பட பல வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனால் வாகனங்களை கட்டுப்படுத்த கோட்டை மலை சாலை படவேடு சாலை பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-சாம்பசிவம், படவேடு.