ஏரிக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2022-10-02 15:01 GMT

திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரில் இருந்து பெரிய ஏரிக்கரை வழியாக மாடப்பள்ளி, மடவாளம், செல்லும் ஏரிக்கரை தார் சாலை உள்ளது. இந்த பகுதியில் நான்கு அரசு மதுபான கடைகள் உள்ளன. பலர் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வாகனங்களில் வேகமாக வருகிறார்கள். ஏரிக்கரை பகுதியில் தடுப்புச்சுவர்கள் அல்லது இரும்புக் கம்பிகள் அமைக்கப்படாதால் வளைவுகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி ஏரிக்கு உள்ளே விழும் அவல நிலை உள்ளது. எனவே ஏரிக்கரையில் தடுப்புச்சுவர் அமைத்துத் தர வேண்டும்.

-வெற்றி கொண்டான் கவுன்சிலர், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்