புதர் மண்டி கிடக்கும் பொதுக்கழிப்பிடம்

Update: 2022-11-06 12:02 GMT

வேலூர் கொணவட்டம் சதுப்பேரி ஏரி அருகே உள்ள தேவி நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அதனை சுற்றி முற்செடிகள் வளா்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பொதுக்கழிப்பிடத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுக்கழிப்பிடத்தை சுற்றியுள்ள முற்செடிகளை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிட்டிபாபு, ெகாணவட்டம்.

மேலும் செய்திகள்