நிரந்தர மருத்துவர் தேவை

Update: 2022-07-23 18:45 GMT

கே.வி.குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவு உள்ளது. அங்கு பணியாற்றிய சித்த மருத்துவர் மாற்றலாகி சென்று ஆண்டு கணக்கில் ஆகிறது. அதற்கு பதில் வேறு ஒரு சித்த மருத்துவர் வேறு ஊரில் இருந்து தற்காலிகமாக வாரத்தில் ஒரு சில நாள் மட்டும் வந்து செல்கிறார்.

இதுவரை நிரந்தர மருத்துவர் நியமிக்கப்படவில்லை. இங்கு மருந்தாளுனராகப் பணியாற்றி வந்தவர் நீண்ட விடுமுறையில் சென்றுள்ளார். தற்போது சித்த மருத்துவரும், மருந்தாளுனரும் இல்லை. உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிரந்தர மருத்துவரை நியமிப்பார்களா?

-மாணிக்கம், கே.வி.குப்பம்.

மேலும் செய்திகள்