ஆரணி முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு அருகே ஆரணி-திருவண்ணாமலை சாலையில் உள்ள அர்ஜுனன் குளத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால் காற்று அடித்தால் குப்பைகள் அனைத்தும் குளத்தில் விழும் அவல நிலை உள்ளது. ஆகையால் குளத்தைத் தூர்வாரி சீரமைத்து, சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரவிந்த்ராஜ்குமார், ஆரணி.