புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும்

Update: 2025-03-02 19:39 GMT

திருவண்ணாமலை ஒன்றியம் தேவனூர் புதூர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். தேவனூரில் ரேஷன் கடை உள்ளது. புதூர் பகுதியில் வசிக்கும் மக்கள் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவனூருக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வர சிரமப்படுகிறார்கள். எனவே புதூர் பகுதியில் புதிதாக ஒரு ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கலையரசன், புதூர்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு